இன்றைய ராசி பலன்கள் ( 18 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை  2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 18 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை  2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 18ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். இன்று பணிச்சுமைக்கு ஆளாகலாம். கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது சாத்தியமில்லை. இன்று வீணான செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். கண்களுக்கு தக்க மருந்துகள் பயன்படுத்தி கவனமாக பாதுகாக்க வேண்டும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டியது அவசியம். சில சமயங்களில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். என்றாலும் அமைதியான சாந்தமான அணுகுமுறை உங்களுக்கு தேவை. கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். முறையாக திட்டமிட்டால் சிறப்பாக செயலாற்ற முடியும். கடன் வாங்க நேரலாம். அதிக செலவினங்களால் கடன் வாங்க நேரிடும். உங்கள் தாயாருக்கு ஒவ்வாமை ஏற்படும். அதன் காரணமாக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடலாம்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். என்றாலும் பிரார்த்தனை, மந்திர ஜபம் போன்ற பக்தியான விஷயங்களில் ஈடுபடுவது அமைதியையும் ஆறதலையும் கொடுக்கும். இன்று பணிச்சுமை காணப்படும். முறையான திட்டமிடல் மூலம் இன்று நீங்கள் நற்பலன்கைளப் பெறலாம். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. உங்கள் தேவைகளை சமாளிப்பதையே கடினமாக உணர்வீர்கள். பல்வலி உபாதைக்கான வாய்ப்பு உள்ளது. உணவில் கவனம் தேவை. இனிப்புப் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

கடக ராசி அன்பர்களே!

இன்றையநாள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களிடம் காணப்படும் உறுதி வெற்றியை பெற்றுத்தரும். மனதில் நம்பிக்கை நிறைந்து இருப்பதன் காரணமாக விரைந்து முடிவெடுப்பீர்கள். உங்கள் பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். உங்கள் சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். அலுவலகத்தில் நடக்கும் பார்டடி போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். உங்களுக்கு பிரியமானவரின் விசேஷத்திற்காக நீங்கள்செலவுகளைச் செய்ய நேரலாம். உங்களின் மனஉறுதி காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நம்பிக்கையுடன் முயன்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆழ்ந்த திருப்தியை உணர்வீர்கள். உங்கள் பணிகளை நேர்மையான முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள். சிக்கலான பணிகளையும் சாதாரணமாக செய்து வெற்றி பெறுவீர்கள். கணிசமான தொகை கிடைக்கும். குடும்பத்திற்கான பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களின் சாதாரண போக்கால் ஆரோக்கியத்தை நல்லமுறையில் வைத்திருப்பீர்கள்.

கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் வளர்ச்சி குறித்த கவலை இன்று காணப்படும். தடைகளை எதிர்கொள்வது கடினமாக உணர்வீர்கள். எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. இன்று நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. பொறுமையுடன் சிறப்பாக கையாண்டால் சூழ்நிலையை சமாளிக்கலாம். செலவினங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கையிலிருக்கும் குறைந்த பணத்தைக் கொண்டு சேமிப்பதென்பது கடினமாக இருக்கும். உங்கள் தந்தையின் சிறியதொரு உடல்நிலை பாதிப்புக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.

துலா ராசி அன்பர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அன்றாட அலுவல்களை கவனமுடன் செய்ய வேண்டும். பேசுவதற்கு முன் யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனை உங்களுக்கு ஆறதல் அளிக்கும். இன்று பணிச் சூழல் சாதகமாக காணப்படும். உங்கள் கடின முயற்சி மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடினமான பணிகளை எளிதாக கையாள்வீர்கள். பணவரவு குறைந்து காணப்படும். உங்களுக்கு பிரியமான ஒருவரின் உடல்நலத்திற்காக ஏற்படும் திடீர் செலவு உங்களுக்கு கவலையை அளிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று நற்பலன்கள் ஏற்படும். உங்கள் முயற்சிகள் நல்லபலனையும் திருப்தியையும் ஏற்படுத்தும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பலவீனங்களை அறிந்து பணியாற்றினால் உங்கள் செயலதிறன் மேம்படும். பணியில் உங்கள் நேர்மை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். தொலைதூரத்திலிருந்து வரவேண்டிய நீண்ட கால நிலுவைப் பணம் வந்து சேரும். வங்கியிருப்பு அதிகரிக்க அது உதவும். இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் ஆற்றலுடனும் துடிப்புடனும் காணப்படுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே!

கடினமான முயற்சிகள் செய்தால் இன்றைய நாளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம். உங்கள் திறமைகளை மேம்படுத்த இந்த நாளை பயன்படுத்துங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். பணிச்சுமை காரணமாக குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட் பணிகளை முடிக்க முடியாது. இன்று கையிலிருக்கும்; பணம் போதுமானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் இருக்கும்.உங்கள் கடின உழைப்பிற்காக ஊக்கத்;தொகை பெறுவீர்கள். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். இன்று ஆற்றலுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

இன்று உங்கள் இலக்குகளை அடைய கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.உங்கள் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் நல்ல விளiவுகள் ஏற்படும். இன்றைய பணிகள் சற்று சவாலானதாக இருக்கும். பணிச்சுமை காரணமாக பணிகளில் தவறுகள் நேரலாம். வீட்டில் இருக்கும்பெரியவர்களின் உடல் நலனிற்காக செலவுகள் செய்ய நேரலாம். அதனால் உங்கள் செலவினங்கள்அதிகமாக இருக்கும். சேமிக்க இயலாது. குழப்பமான எண்ணங்கள் காரணமாக உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்காது. இது உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு பெரியவர்களின் ஆலோசனையைப்பெற வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பீர்கள். உங்கள் செயல்திறன் உங்கள் சகபணியாளர்களின் செயல்திறனை மிஞ்சியதாக இருக்கும். பண இழப்புகள் காணப்படுகின்றன. நிதிலையை கவனமான முறையில் கையாள வேண்டும். கால்வலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்ததை குறைக்கலாம்.

மீனராசி அன்பர்களே!

இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று முயற்சியே இல்லாமல் கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். திறமையாக பணியாற்ற பயனுள்ள கால அட்டவணையை அமைத்து செயல்படுவது சிறந்தது. பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...