காதுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே அதிர்ச்சியில் உறையும் அளவுக்கு, காதின் உள்ளே கரப்பான் பூச்சி குடும்பத்துடன் குடியிருந்துள்ளது.
சீன இளைஞரின் காதில் குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சிகள் பாட்ஷா பட டயலாக் மாதிரி டிரிட்மெண்ட் பண்ற டாக்டரே மிரண்டு போய் நிக்கிறார்ன்னு அந்த மாதிரி மருத்துவர் மட்டுமில்ல மருத்துவமனையும் கூட !
24வயதான லிவ் ஹூயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவரின் காதிற்குள் சில நேரங்களில் அசைவும் வலியும் இருந்திருக்கிறது வலி அதிகரிக்க கைவைத்தியங்கள் கைவிட்ட நிலையில் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளார் அப்போதுதான் வாடகையின்றி கரப்பான்பூச்சிகள் குடும்பமாய் வாழ்ந்தது தெரியவந்தது.
காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளோடு இருந்துள்ளது. இதனால் உடனடியாக ஒவ்வொரு கரப்பான் பூச்சியாக கருவி மூலம் வெளியே எடுத்துள்ளனர்.
குட்டிகளை வெளியே விரைவி எடுத்துவிட்டாலும், தாய் கரப்பான் பூச்சியை அகற்றுவதில் மருத்துவர்களுக்கு பெரும் சிரமம் இருந்துள்ளது. இதனால் களிம்பு கொண்டு காதை சுத்தப்படுத்தி நீண்ட போராட்டத்துக்குப்பின் தாய் கரப்பான்பூச்சியை அகற்றியுள்ளனர். ”லீவ் தினமும் சாப்பிட்டதுபோக மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே வைத்துள்ளார். அதனால் உணவை சாப்பிட வரும் கரப்பான் பூச்சிகள் காதுக்குள் சென்றிருக்கிறது.
எத்தனை நாட்களாக கரப்பான் பூச்சி காதில் இருந்தது என தெரியவில்லை” என மருத்துவர் தெரிவித்துள்ளார்
