தைப் பொங்கல்

 தைப் பொங்கல்

தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தை முதல் தேதி தவறாமல் வந்திடுமே

தமிழர்கள் மனதிலே உற்சாகம் பொங்கிடுமே

பச்சரிசியுடன் பாலும் பானையில் பொங்கிடுமே

மஞ்சளும் வேப்பிலையும் பானையில் கட்டுவோமே

கரும்பினையும் படைத்து சுவையும் பெறுவோமே

கலகலப்புடன் புத்தாடை அணிந்து மகிழ்வோமே

பொங்கும் நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்போமே

உலகுக்கு ஒளிதரும் செங்கதிரவனுக்கு படைப்போமே

உழவுக்கு உதவிடும் காளையும் சிறப்பு பெறுமே

கன்றுடன் பசுவுக்கும் மாட்டுப் பொங்கலில் கொண்டாட்டமே

காலமெல்லாம் உணவு தரும் விவசாயியை போற்றுவோமே

தமிழர்கள் திருநாளாம் தைப்பொங்கலைப் போற்றுவோமே

இத்தரணியில் இந்நாளில் சொந்தங்களுடன் பெருமை கொள்வோமே

முருக. சண்முகம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...