சோனியா தலைமையில் காங்கிரசு

 சோனியா தலைமையில் காங்கிரசு

சோனியா தலைமையில் காங்கிரசு


மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கொஞ்சம் உயிர் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமை அக்கறை செலுத்தி இருந்தால் இன்னும் அதிக இடங்களை இரண்டு மாநிலங்களிலும் பெற்று இருக்கலாம் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.ஹரியானா மாநிலத்தில் பெரிய அளவில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ராகுல் காந்தி தேர்தல் சமயத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்தார். சோனியா காந்தி ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரம் செல்ல முடிவு செய்து, பின்னர் அதை ரத்து செய்தார்.


இந்த நிலையில்தான் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரசின் வெற்றி அதிகரித்துள்ளது. ஹரியானாவில் ராகுல் காந்தி இரண்டு நாட்கள்தான் பிரச்சாரம் செய்து இருந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் 10 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. 6 இடங்களில் பாஜகவும், 3 இடங்களில் சமாஜ்வாடிக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் எந்தத் தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்த மாநிலத்தில் ராகுல் காந்தியோ, சோனியாவோ பிரச்சாரம் செய்யவில்லை.

பொதுவாக இடைத்தேர்தல் என்று வரும்போது கட்சித் தலைவர்கள் தவிர்த்து விடுவார்கள். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது இதெல்லாம் செய்தி அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் சோனியா காந்தி தலைமை ஏற்று இருப்பதால், அந்தக் கட்சியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்று கட்சியினர் நம்புகின்றனர்.

அதைத்தான் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பிரதிபலித்துள்ளனர். இன்னும் கொஞ்சம் உழைத்து இருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம் என்று அமரிந்தர் தெரிவித்துள்ளார். சோனியாவையும் புகழ்ந்துள்ளார்.

அதேபோல், வேணுகோபால் வெளியிட்டுள்ள கருத்தில், ”மத்தியில் சோனியா காந்தி தலைமை பொறுப்பை ஏற்று இருப்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், எங்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...