வரலாற்றில் இன்று (13.01.2024 )

 வரலாற்றில் இன்று (13.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 13 (January 13) கிரிகோரியன் ஆண்டின் 13 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 (நெட்டாண்டுகளில் 353) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1815 – கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.[1]
1830 – லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
1840 – அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.
1842 – முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார்.
1847 – கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
1849 – வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது.
1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.
1893 – அமெரிக்க கடற்படை, அவாய், ஒனலுலுவில் தரையிறங்கியது.
1908 – பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.
1910 – முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது.
1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.
1930 – மிக்கி மவுஸ் சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
1938 – இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
1939 – ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.
1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1950 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
1963 – டோகோவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சில்வானுசு ஒலிம்பியோ கொல்லப்பட்டார்.
1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1972 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமரும், அரசுத்தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள்.
1982 – வாசிங்டனில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.
1985 – எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர்.
1986 – தெற்கு யேமன், ஏடன் நகரில் ஒரு மாதமாக இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1991 – சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக சப்பான் மன்னிப்புக் கோரியது.
1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1998 – தற்பாலினர் வெறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்பிரெடோ ஓர்மண்டோ என்பவர் புனித பேதுரு சதுக்கத்தில் தீக்குளித்து இறந்தார்.
2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
2006 – சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
2012 – இத்தாலியப் பயணிகள் கப்பல் கொஸ்டா கொன்கோர்டியா கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1858 – ஆஸ்கர் மின்கோவஸ்கி, லித்துவேனிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1931)
1864 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1928)
1879 – மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்கர் (இ. 1961)
1887 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், உருசிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1949)
1889 – வசீலி பெசென்கோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 1972)
1906 – சூ யூக்வாங், சீன மொழியியலாளர் (இ. 2017)
1911 – எம். ஜி. சக்கரபாணி, இந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)
1911 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)
1913 – செ. அச்சுத மேனன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி, கேரள முதலமைச்சர் (இ. 1991)
1922 – ஏரம்பு சுப்பையா, ஈழத்து பரத நாட்டியக் கலைஞர் (இ. 1976)
1946 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
1949 – ராகேஷ் சர்மா, இந்திய விண்வெளி வீரர்
1960 – எரிக் பெட்சிக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
1977 – ஆர்லாந்தோ புளூம், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1978 – நேட் சில்வர், அமெரிக்க ஊடகவியலாளர், புள்ளிவிபரவியலாளர்
1983 – இம்ரான் கான், இந்திய நடிகர்
1990 – லியம் எம்சுவர்த், ஆத்திரேலிய நடிகர்

இறப்புகள்

1717 – மரியா சிபில்லா மெரியன், செருமானியப் பூச்சியியலாளர் (பி. 1647)
1906 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (பி. 1859)
1941 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1882)
1977 – என்றி லங்லொவைசு, துருக்கிய-பிரான்சிய வரலாற்றாளர் (பி. 1914)
2013 – கனகசபை சிவகுருநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1920)
2014 – அஞ்சலிதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)
2015 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1930)
2016 – ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)
2016 – ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படைத் தளபதி (பி. 1923)

சிறப்பு நாள்

சனநாயக நாள் (கேப் வர்டி)
உலோகிரி (பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...