இந்திய வானிலை மையம்.
தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
கனமழை: ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம்.தொடர் மழையால் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் மண்சரிவு, நீலகிரி மலை ரயில் போக்குவரத்து வரும் 24ம் தேதி வரை ரத்து.
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு. ”மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்” ”நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்” ”பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, தகவல் தெரிவிக்க வேண்டும்”+
கொடைக்கானல் அருகே அடுக்கம் கிராமம் முதல் கும்பக்கரை அருவி வரை கனமழையால் பல இடங்களில் மண்சரிவு
மேலடுக்கு சுழற்சியால் மழை! தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது.தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு. மொத்த கொள்ளளவான 71 அடியில் வைகை அணை 63 அடி நீர் நிரம்பி உள்ளது.
தொடர்மழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- ஆட்சியர் ஜெயகாந்தன்
சென்னையில் தொடர்கிறது மழை! ராயபுரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, நங்கநல்லூர், மத்திய கைலாஷ், தாம்பரம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.