நல் காரியங்கள் செய்ய மனதும் வேண்டும் – முயற்சியும்!
இப்படி தான் இருக்க வேணும்….
அட்ரா சக்கை!
செல்வமும் செல்வாக்கும் மட்டும் இருந்தால் போதாது – நல் காரியங்கள் செய்ய மனதும் வேண்டும் – முயற்சியும்!
சுத்தம் சுகாதாரம் -சுற்று சூழல் எல்லாம் மிக முக்கியம் என்றாலும் கூட நம் வீடுகளிலேயே அவற்றை எளிதாய் பேண முடிகிறதா?
அப்படி இருக்க பொது இடங்கள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. வெளியே குப்பைகளை எளிதாய் எறிந்து விட்டுப் போகிறோம்.
சிறுநீர் ! உமிழ் ! கழிவுகள் !
நாள் முழுக்க–வருடம் முழுக்க அவற்றை சகிப்புடன்– சாதாரண -ஊதியத்தில் வெயில் – மழை – வெள்ளம் – பள்ளம்-புயல் பனி எனப் பாராமல் நாற்றத்தில், தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்கிறார்கள்.
அதுவும், சமீபத்தய மழை வெள்ள த்தில்- பாதுகாப்புடன் மக்கள் முடங்கியிருக்க –
தெரு,சாலை, பொது பாதிப்புக்கள்-,வெள்ளம்,பள்ளம்,சேறு,சகதி, விழுந்த மரங்கள் என களத்தில் இரவு பகலாக அந்தப் பாவங்கள் பணியாற்றியுள்ளனர்.
யார் யாரோ செய்கிற நற் காரியங்களை –
நேரடியாகவோ,மறைமுகமாகவோ அனுபவிக்கிற நாம் அவர்களை ஆராதிக்கிரோமா?
ஆதரிக்கிறோமா?
ஆனால்—
அவர்களின் ஊழியத்தை – மதித்து – மரியாதை செய்ய வேண்டும் என்று— சென்னை – நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவின் அமைப்பினர் முன் வந்தோம்.(வள்ளுவர் கோட்டம் அருகே)
காலனி வாசிகளின் மனமுவந்த அன்பளிப்புடன் – எங்கள் பில்டிங்கில் அந்த தூய்மை பணியாளர்களை வரவழைத்து, கைத்தட்டு ! பூங்கொத்து!
அவர்களை கௌரவித்து – ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருட்கள் வழங்கி, சேர்ந்து சிற்றுண்டி! அப்படியே நெகிழ்ந்துப் போனார்கள்.
இதில்—
லாரா அசோசியனின் செயலாளர் ராம்நாத் தலைமையில் ஈஸ்வர், விஜயன் மற்றும் திருமதிகள் பிரேமா சுரேஷ், புனிதா, வினித்ரா, ரேணுகா போன்ற மகளிரணியினரின் முன்னெடுப்பானது மெச்சத் தகுந்தது.
அதைப் பார்த்த போது—
‘இப்படி தான் இருக்க வேணும் பொம்பளை’ -என்கிற பாடல் நினைவில் நிழலாடிற்று.
— என்.சி.மோகன்தாஸ்
— படமிக்ஸ் : ஹரிலக்ஷ்மண்