ஈரோட்டில் உதித்தஇன்னொரு சூரியன் .
ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன
சிலையாய் நின்ற எம்மை
இயங்க வைத்தவன்
சிலையாய் ஆன பின்பும்
இயங்கி வருபன்.
பூதக் கண்ணாடி கொண்டு
செய்திகள் படித்தவன்
பூதங்கள் எங்கெனச்
சொடக்குப் போட்டவன்.
துல்லியமாக உண்மையை அறிந்தவன்
துடிப்புடன் பொய்களைச்
சாடி அழித்தவன்.
நாளைகள் நமக்கு
வெளிச்சமாகிட
இருட்டை மேனியில்
தூக்கிச் சுமந்தவன்.
இருண்ட பாதையில்
ஒளிக்கதிர் பாய்ச்ச
இன்னுயிர் வாழ்வை
இசைவுடன் கொடுத்தவன்
கைத்தடி ஊன்றி
நடந்த காலையும்
முடங்கிய இனமது
நிமிர்ந்திட உழைத்தவன்.
தந்தையைப் போலக் கண்டிப்பானவன்
தாயினும் மேலாய்க் கரிசனம் கொண்டவன்.
அழுகிய சிந்தனை
அறுத்த மருத்துவன்
அழியாப் புகழுடன்
நிலைத்த பெருமகன்.
ஈராயிரம் ஆண்டு
இருட்டை வெளுத்தவன்
ஈரோட்டில் உதித்த
இன்னொரு சூரியன் .
சுகுமார்