சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு

 சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு

சபரிமலை கோயிலுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு

திருப்பதியை போன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15ம் தேதி திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளான நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். இந்தக் காலங்களில் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருப்பதியை போன்று சபரிமலையிலும் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்தாண்டு மண்டலப் பூஜையின் போது அனைத்து பக்தர்களும் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்காக புதிதாக தொடங்கப்படவுள்ள இணையதள முகவரியில், பக்தர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.onlinetdb.com/tdbweb/dist/login

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...