சசி ஐயோ பாவம்
சசி ஐயோ பாவம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் 40 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர்.
ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா, மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் செல்போன்கள் மூலம் கைதிகள் வெளியில் உள்ளவர்களுடன் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையடுத்து பெங்களூரு மாநகர போலீசார் அதிரடியாக சோதனையில் இறங்கினர். இதற்காக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு சிறைக்கு சென்றனர்.
அங்குள்ள கைதிகளின் அறைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் அறைகளும் அடங்கும்.
இந்த சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், மது பாட்டில்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது