இராண்டாயிரம் ரூபாய்க்கு வேட்டு

 இராண்டாயிரம் ரூபாய்க்கு வேட்டு

டெல்லி: ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.



அத்துடன், அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானதால், புதிய ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் ரிசர்வ வங்கி வெளியிட்டது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.2000 நோட்டுக்களை நீக்கிய பின்னர், ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுக்களை நீக்கும் பணிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது.



அதிக மதிப்புடைய நோட்டுக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, குறைவான மதிப்புடைய நோட்டுக்களின் புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...