ஜியோ இலவச கால் இனி கிடையாது
ஜியோ இலவச கால் இனி கிடையாது – ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா !
அட்மின்மீடியா
ஜியோ கால்களுக்கு இனி கட்டணம் – ஜியோ அறிவிப்பு
ஜியோவில் இருந்து ஜியோவிற்க்கு மட்டுமே இலவசம்
இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இனி மற்ற நெட்வொர்க்கிற்க்கு கால் செய்தால் ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா கட்டணம் என ஜியோ அறிவித்துள்ளது
ஜியோ சிம்கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி ரீசார்ஜோடு சேர்த்து IUC (interconnect usage charge) ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த நடைமுறையானது நாளை (10.10.2019) முதல் அமலுக்கு வருகிறது.
ரூ. 10 – 124 நிமிடங்கள் – 1 ஜிபி டேட்டா
ரூ. 20 – 249நிமிடங்கள் – 2 ஜிபி டேட்டா
ரூ. 50 – 656நிமிடங்கள் – 5 ஜிபி டேட்டா
ரூ. 100 – 1,362நிமிடங்கள் – 10 ஜிபி டேட்டா