சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை வழக்கு.
சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை வழக்கு.
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக்கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ, கடந்த மாதம் 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று போது அவர் மீது பேனர் விழுந்தது. இதனால் சாலையில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே தமக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரின் தந்தை ரவி , சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் சட்டவிரோதமாக பேனர் வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தமது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுபஸ்ரீயின் தந்தை ரவி மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.