இன்றைய முக்கியச் செய்திகள்..
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பையொட்டி, வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சென்னையில் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சந்திப்பு மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையையொட்டி சென்னை விமான நிலைய சுவர்களில் வண்ண ஒவியங்கள தீட்டப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லும் சாலைகள் பளபளக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற திமுக திட்டமிட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இரு தொகுதிகளிலும் மக்கள் செல்வாக்குடன் அதிமுக அமோக வெற்றி பெறும் என பழனிசாமி தெரிவித்தார்.
இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களின் 31 லட்சம் வங்கிக் கணக்குகளை சுவிஸ் வெளியிட்டுள்ளது. அதில் பலரது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் கடந்த ஆண்டிலேயே திரும்ப எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு வில்லியம் ஜி கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் மற்றும் கிரேக் செமன்ஸா ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மனித குலத்துக்கு பயன்படத்தக்க வகையிலான மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1901ஆம் ஆண்டு முதல் 2018 வரை மொத்தம் 109 முறை மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.