கலக்க போவது யாரு என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உலகம் முழுவதும் அறிப்பட்டவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ஒரு சில நொடிகளில் ஒரு மணி நேர நிகழ்ச்சியை சிரிக்க சிரிக்க நடத்தி மகிழ்விப்பவர். கருப்பசாமி குத்தகைதாரர் உள்பட பல படங்களில் தன் நகைச்சுவையால் மிளிர வைத்தவர்.
அவர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அவரது புத்திசாலித்தனமும் திறமையும் அவரை முன்னிருத்தி வளர வைத்திருக்கிறது. அதை பற்றி கேட்ட போது, அதற்கு அவர்,
“தற்போது ஓட்டலில் டேபிள் துடைப்பதை பார்த்து இருக்கிறீர்களா.. டேபிளில் சிதறி கிடக்கும் உணவு துணுக்குகள், சாம்பார், சட்னி, குழம்புகளை வழித்து எடுக்க அலுமினிய காப்பிட்ட சதுரமான ஒரு ரப்பர் துண்டம்.. ஸ்பிரே செய்வதற்கு பர்ஃப்யூமுடு சோப் வாட்டர் ஸ்பிரேயர்.. டேபிள் துடைக்க அருமையான வேஸ்ட் பனியன் கிளாத்.! இவை அனைத்தையும் எடுத்து போக சக்கரத்துடன் ஒரு டிராலி.!
