திருமந்திரம்…

 திருமந்திரம்…
திருமந்திரம்…
“அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.”
என்ற திருமந்திரத்தில் இருந்து உணர்வது யாதெனில்
மும்மல வினைகளை அரத்தால் தேய்ப்பித்தலின். 
காரணமாய் அரனென்னப்பட்டனன். மாயாகாரியத்தை திருவாற்றலால் ஒடுக்குதலின் கரன் என்னப்பட்டான். 
எனவே, இருசொற்களின் முதனிலைகள் சேர்ந்து அரகர என்றாயிற்று.
அரகர என்று உள்ளன்புடன் ஓதுவார்க்குத் திருவருள் துணை முன்னிற்பதால் செயற்கரிய செயலென்று ஒன்றும் இல்லை. 
இவ் உண்மையினைப் பலர் உணர்ந்திலர். 
அரகர என்று ஓதச் சிவவுலகப் பெரும்பேற்றினராவர். 
அரகர என்று ஓதப் பிறப்பற்றுச் சிறப்புற்றுப்பெரு வாழ்வு வாழ்வர்.
ஓம் சிவயநம…
“நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்”
“ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...