ஆயிரம் பேருக்கு வேலை

 ஆயிரம் பேருக்கு வேலை

ஆயிரம் பேருக்கு வேலை 

நாட்டில் தொழில்துறை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. நாட்டில் பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான வேலை நாட்களைக் குறைத்து வருகிறது.


இதற்கிடையில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டமும் பெருகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, நாட்டில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் பெரும்பாலானவர்கள், பணம் சம்பாதிக்கப் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத துறைகளில் பணிக்குச் சேர்ந்து வந்தது தெரியவந்தது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அரசு முறை சுற்றுப் பயணமாக, தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று வந்தார். சுற்றுலா சென்று ஊர் திரும்பிய முதல்வர் “தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும், விரைவில் அதன் மூலம் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்” என பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்தார்.

இந்நிலையில், தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து அக். 4ஆம் தேதி(நாளை) தனியார்த் துறைக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வயது வரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இந்த முகாமில், 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு, எனத் தகுதி வாரியாக நேர்காணல்கள் நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் வாய்ப்புகள் காத்திருக்கிறது.

இந்த முகாமில் தேர்வுகளை 15க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் நடத்துகிறது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
இந்த முகாம் சென்னை கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி தொடங்கி மதியம் 2 மணிவரை நடக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...