வரலாற்றில் இன்று ( 07.12.2023 )

 வரலாற்றில் இன்று ( 07.12.2023 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

திசம்பர் 7 (December 7) கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார்.
574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார்.
1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
1787 – டெலவெயர் அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது.
1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரான்சியத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
1922 – வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.
1932 – செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது.
1936 – ஆத்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் யாக் பிங்கிள்ட்டன் அடுத்தடுத்த நான்கு தேர்வுப் போட்டிகளில் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.
1941 – பேர்ள் துறைமுகத் தாக்குதல்: சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
1946 – அமெரிக்காவின் அட்லான்டா நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.
1949 – சீன உள்நாட்டுப் போர்: சீனக் குடியரசின் அரசு நாஞ்சிங்கில் இருந்து தாய்பெய்க்கு மாறியது.
1966 – துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.
1971 – பாக்கித்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் “அப்பல்லோ 17” சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.
1975 – கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
1982 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் முதல் தடவையாக ஊசிமருந்து ஏற்றப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1983 – எசுப்பானியாவில் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் உயிரிழந்தனர்.
1987 – கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் உயிரிழந்தனர்.
1988 – ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1988 – யாசர் அரபாத் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார்.
1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.
2015 – சப்பானின் விண்கலம் அக்காத்சுக்கி வெள்ளிக் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
2016 – பாக்கித்தான் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.
2017 – ஆத்திரேலியாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

பிறப்புகள்

903 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986)
1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)
1849 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1906)
1883 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (இ. 1953)
1905 – ஜெரார்டு குயூப்பர், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1973)
1926 – கே. ஏ. மதியழகன், தமிழக அரசியல்வாதி (இ. 1983)
1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்க மொழியியலாளர்
1929 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)
1932 – ரோஸ்மேரி ரோஜர்ஸ், அமெரிக்க ஊடகவியலாளர்
1939 – எல். ஆர். ஈஸ்வரி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1988 – வாணி போஜன், தமிழக தொலைக்காட்சி நாடக நடிகை
1993 – சுரபி தென்னிந்திய திரைப்பட நடிகை

இறப்புகள்

கிமு 43 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106)
283 – யுட்டீக்கியன் (திருத்தந்தை)
1782 – ஐதர் அலி, மைசூர் மன்னர் (பி. 1720)
1912 – ஜார்ஜ் ஓவார்டு டார்வின், ஆங்கிலேய வழக்கறிஞர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1845)
1952 – பாரெசுட்டு இரே மவுள்டன், அமெரிக்க வானியலாளர் (பி. 1872)
1979 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர் (பி. 1900)
1984 – நிகோலாய் இமானுவேல், உருசிய வேதியியலாளர் (பி. 1915)
1985 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1895)
2006 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி (பி. 1932)
2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923)
2010 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் (பி. 1942)
2011 – வி. பி. சிங்காரவேலு, தமிழக அரசியல்வாதி (பி. 1959)
2016 – சோ, தமிழக நடிகர், பத்திரிக்கையாளர் (பி. 1934)

சிறப்பு நாள்

தேசிய வீரர்கள் நாள் (கிழக்குத் திமோர்)
கொடி நாள் (இந்தியா)
மரியாவின் அமல உற்பவம் விழா
பேர்ள் துறைமுக நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...