இன்றைய முக்கிய செய்திகள்
உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறள்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அழைப்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் மனப்பாடமாகச் சொல்ல வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
நீலகிரியில் மீண்டும் தொடங்கிய கனமழை: மரம் விழுந்து இளைஞர் பலி
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. குந்தா பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழ்கோத்தகிரி அருகே மரம் விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
ஊட்டியில் தான் படித்த போது தமிழை படித்திருக்க வேண்டும் என மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார் . ஐநாவில் பேசிய மோடி உலகின் பழமையான மொழி என்று தமிழைக் குறிப்பிட்டார். அதுவரையிலும் அதை தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். என்று அவர் ட்வீட் செய்திருக்கிறார்
ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் அடுத்த தலைவராக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனனை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன் – ரூபி மனோகரன் பேட்டி.