அதிர்ச்சி வீடியோ இணையத்தில்

 அதிர்ச்சி வீடியோ இணையத்தில்

 அதிர்ச்சி வீடியோ இணையத்தில்…..

சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே அமைந்துள்ளதுதான் இந்த மருத்துவக் கல்லூரி. எத்தனையோ ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்து வரும் இந்த கல்லூரியில் பேராசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.


இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், தன்னை அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்வதாக கல்லூரி துணை முதல்வர் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் மீது புகார் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இறுக்கமான குரலில் சத்தமிட்டு அழுக முடியாமல் அவர் பதிவிட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது…

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உதவி பேராசிரியையாகப் பாடம் எடுத்து வருகிறேன். இதே கல்லூரியின் விடுதியில் தங்கி வரும் என்னை கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலக நிர்வாக துறையிலிருக்கும் லக்ஷ்மிகாந்தன், செந்தில், வெங்கட்ராமையா ஆகியோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துப்புறுத்தி வருகின்றனர். என்னைப் பற்றி தவறாகச் சித்தரித்து அனைவரிடமும் பேசி வருகின்றனர். மேலும் என்னைத் தற்கொலை செய்துகொள்ளும்படி சித்ரவதை செய்கின்றனர்.

இரண்டு நாட்களாகத் தண்ணீர், உணவு எதுவும் கொடுக்காமல் ஒரு அறையில் என்னை அடைத்து வைத்துள்ளனர். இதுபோக கல்லூரியின் துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன் என்னை பணியிடை நீக்கம் செய்து என் வாழ்க்கையை நாசம் செய்யப் போவதாகவும் மிரட்டுகிறார். மேலும் பணி ஊழியரான கிருஷ்னேஸ்வரி மாணவர்கள் முன்னிலையில் கீழே தள்ளி அவதூறாகப் பேசி அவமானப் படுத்தியதாகவும் இந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து தாழம்பூ ர் போலீசார் இதுகுறித்து விசாரித்தனர். பின்பு கல்லூரிக்கு விரைந்த காவலர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியை மீட்டனர். மேற்கண்ட புகாரின் படி கல்லூரி முதல்வர் வெங்கடகிருஷ்ணன், செந்தில், வெங்கட்ராமையா , கிருஷ்னேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...