மதுரையில் பாலியல் தொழில்
மதுரையில் பாலியல் தொழில்
பொள்ளாச்சியில் தங்களுக்கு தெரிந்த, பழகிய பெண்களை ஏமாற்றி வலையில் விழ வைத்து ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்டினர். பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். ஆனால், மதுரையில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பெண்களை கடத்தி ஆன்லைன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இதற்கான குறுஞ்செய்திகளை செல்போனுக்கு அனுப்புவார்கள். அந்த குறுஞ்செய்தியில், ”பெண்கள் துணை வேண்டுமானால், எங்களை அழைக்கவும்” என்று செய்தி வரும். அதில் ஒரு மணி நேரத்து ரூ. 4000, ஒரு நாள் இரவுக்கு ரூ. 12000 என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு மெசேஜ் தனிப்பிரிவு காவலர் ஒருவருக்கு சென்றுள்ளது. சுதாரித்துக் கொண்ட அவர் வாடிக்கையாளரைப் போல நடித்து, அவர்கள் வரச் சொன்ன பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு அதிர்ச்சி. வீடு எடுத்து இந்த தொழிலை செய்து வந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்குள் சென்றவருக்கு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை அனுப்பியுள்ளனர். அறைக்குள் இருக்கும் குளியறைக்குள் சென்று காவல் படையை காவலர் உஷார்படுத்தியுள்ளார். விரைந்து சென்ற தனிப்பிரிவு காவல் படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த மனோஜ்குமார், அய்யனார் உள்பட மூவரை கைது செய்தனர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மதுரையில் பாலியல் தொழில் நடப்பதைத் தடுக்க மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் ஏற்கானவே உத்தரவு பிறப்பித்து பலர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தொடர்ந்து பாலியல் தொழில் நடப்பது அந்த மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம்தான் நிதி நிறுவனத்தின் பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்தவரை காவலர் கைது செய்தனர். அதிக சம்பளம் கொடுப்பதாக வேலூரைச் சேர்ந்த ஜெ. முதர்சீயர் என்பவர், பெண்களை ஏமாற்றி மதுரைக்கு அழைத்து சென்றார். பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். காவலருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் பின்னர் அவர் கைது செய்யப்பட்டா