திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!!
திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!!
பல்லாவரத்தில் சட்டத்திற்கு புறம்பாக 41 பேருக்கு நிலம் ஒதுக்கிய குற்றச்சாட்டின் கீழ் 2016ல் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, பொதுநல வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து அவர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது.
இதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் சிபிசிஐடி-க்கு புதிய தலைவராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் தூசு தட்டுமாறு தனது துறைக்கு ஜாபர் சேட் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி வடக்கு மண்டல கண்காணிப்பாளர் சம்மன் அனுப்பினார்.
சென்னை பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனியின் தலைவராக ஜெகத்ரட்சகன் இருந்து வந்தார். இந்தக் கம்பெனியின் நிலத்தை, 1982ல் தமிழ்நாடு நகர்ப்புற நில மீட்பு மற்றும் சீரமைப்புச் சட்டத்தின் கீழ் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழக அரசின் கீழ் கொண்டு வந்தார். இந்த நிலம் நீர் வள ஆதாரத்திற்கு பயன்படுத்தப்படும் என்று கூறி 1984ல் அடிக்கல் நாட்டினார்.
அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை; பெரியாருக்காக கருணாநிதி கூறியது!!
இதையடுத்து, இந்த நிலத்தில் இருந்த அடிக்கலை சட்ட விரோதமாக ஜெகத்ரட்சகன் நீக்கிவிட்டு, தனது உறவினர்களுக்கு 41மனைகளாக பிரித்துக் கொடுக்குமாறு பரிந்துரை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மனை பெற்றவர்கள் அனைவரும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், குரோம் லெதர் கம்பெனியில் பணியாற்றி வந்த ஊழியர்கள் என்று கூறப்பட்டது. இந்த மனை 1996ல் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்கள் சொற்களே எங்களுக்கு ஆயுதம்: முக ஸ்டாலின் ட்வீட்!!
இதை நில மோசடி குற்றச்சாட்டின் கீழ் கொண்டு வந்து ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்மீது இன்று ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.