விஜய் அரசியலுக்கு வருகிறரா?

விஜய் அரசியலுக்கு வருகிறரா? 

மீப காலமாக தமிழ்நாட்டில், நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெளியாவதுக்கு முன் அதிரடியான கருத்துக்களைக் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தும் நடிகர் விஜயின் கருத்தும் பெரும்பாலும் முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகிறது. இதன் பின்னால் இவர்கள் கூறும் குட்டிக் கதைகள்தான் உள்ளன எனக் கூறிக்கொண்டாலும், அதையும் கடந்து சில அரசியல் உள்ளதாகவே கூறப்படுகிறது. இவர்கள் தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்படுகிறார்களா என்ற கேள்விதான் நம்மில் பலர் மனதில் ஒளிந்திருக்கிறது.


நடிகர் ரஜினிகாந்த்தை 1996ல் அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் நரசிம்மராவ், தேர்தல் அரசியலுக்குள் வருமாறு வெளிப்படையாக அழைப்பு ஒன்றை விடுகிறார். இந்த அழைப்பு குறித்து இப்போதும் ரஜினி பல மேடைகளிலும், நிருபர்களிடம் பேட்டி அளிக்கும்போதும் நினைவுபடுத்தி வருகிறார். இந்த விடயத்தை அரசியல் விமர்சகர்கள் தொடங்கிப் பல தனியார் டிவி நியூஸ் சேணல்களும், ரஜினி அடுத்த எம்ஜிஆரா என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். இதற்கிடையில், எம்ஜிஆர்-காங்கிரஸ் கூட்டணியை நாம் நினைவுகொள்ள வேண்டியதாக உள்ளது.

எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளிவந்து அசைக்க முடியாத சக்தியாகத் தமிழகத்தில் உருவாகுகிறார். தமிழகத்தில் கட்சித் தொடங்கியதிலிருந்தே எம்ஜிஆர் செல்வாக்கு மிக்கவராகவே பார்க்கப்படுகிறார். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபோதும், ஆரம்பக்காலத்தில் எம்பி தேர்தல்களில் பெரிதாக வெற்றிகளைக் குவிக்கவில்லை. எம்ஜிஆர்-காங்கிரஸ் கூட்டணி 1984ல் உருவாகிறது, இந்த கூட்டணி தமிழகத்தில் அதிகப்படியான இடங்களைப் பெறுகிறது.

இந்த கூட்டணி அமைவதுக்கு முன்பு வரை, திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் தொடர்ந்து கொண்டிருந்தது. எனினும், நாட்டில் 1975ல் வந்த அவசர நிலை பிரகடனத்துக்குப்பின் தமிழகத்தில் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையே மோதல் போக்குதான் தொடர்ந்தது. கூட்டணியிலிருந்தபோதும், காங்கிரஸ் விரோத செயல்களில் திமுக ஈட்டுப்பட்டு வந்தது. இதன் காரணமாக திமுகவின் வலிமையை ஒடுக்க நினைத்த கூட்டணியாகவே, எம்ஜிஆர்-காங்கிரஸ் கூட்டணி உருவாகிறது.

இந்த வழிமுறையை அரசியல் விமர்சகர்கள் பார்வையில் கூறவேண்டுமென்றால், “தேசியக் கட்சி தனது செல்வாக்கு இல்லாத மாநிலத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் ஒரு பிரபலத்தை வைத்தோ அல்லது ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இணக்கமான போக்கைக் கையாள்வதும்தான் ஒரே வழி” என்பதே ஆகும். இந்த முறைக்கு, தமிழ்நாடும் பாஜகவும் சிறந்த எடுத்துக்காட்டாக விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

இந்த முறையில், அதிமுக-பாஜக இருந்து வருகிறது. அதே வேலையில், பாஜக தனது ஆதிகத்தை நேரடியாக, அதாவது தனது சித்தாந்த ரீதியாகத் தனது வழியில் ஒருவரை முன் நிறுத்தவே ரஜினியை ஆதரித்து முன்மொழிந்து வருகிறது என்கிறார்கள் விமர்சகர்கள். அதேவழியில், இவர்கள் நடிகர் விஜயை எதிர்க்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.


விஜய் முன்னிறுத்தப்படுவதுக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் காங்கிரஸ் கட்சியின் தமிழக குரல் எனக் கூறப்பட்டாலும், பெரியதொரு அடையாளத்தை அவரிடம் செலுத்த முடியவில்லை. குறிப்பாகக் விஜய் இப்போதைய நேரத்தில் இளைய தளபதி என்ற பட்டத்துடன் வலம் வந்தாலும், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறார். இந்த அடைமொழியின் வழியாகவே, விஜய் அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாரிக்கப்படுகிறார் என்கிறார்கள். இதன் பின்னணியில் காங்கிரஸ் குழு ஒன்று வழி நடத்துவதாகவும், மேலே கூறப்பட்டது போன்ற சில தரவுகள் எடுத்து வைக்கப்படுகிறது.


பாஜக முகமாக, ரஜினி வருவதுக்கு போதுமான ஆதாரங்கள் இருந்து வரும் நிலையில், விஜய் விரைவில் அரசியலில் குதிப்பார் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்போது, பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துக்கு, திமுகவிடமிருந்து எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலர் அமைதி காத்துகிடகிறார்கள். அதே நேரத்தில், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி விஜய் கூறிய கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்கிறார்.

குறிப்பாக சன் டிவி சேணல், விஜயின் கருத்தை விளம்பரமாக்கி அதை தவிர்க்க முடியாத இடத்துக்குக் கொண்டு செல்கிறது. ரஜினிதான் அடுத்த எம்ஜிஆராக மாற்றப்படுவார் எனக் கூறி வந்தவர்கள், இப்போது தடுமாறும் சூழலில் ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆரை இந்திய அளவில் முன்னிலைப்படுத்தியதன் பாணியில்தான், இப்போது தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் தமிழகத்தில் ரஜினி, விஜயை தயாராக்கி வருவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சமீப காலமாக நாட்டில் திரிபுரா என பல்வேறு மாநிலங்களில், பாஜக அங்குச் செல்வாக்கு படைத்திருந்த கட்சிகளைச் சிதறடித்ததுக் குறித்து விமர்சகர்கள் சில ஒப்பீடுகளை முன்வைக்கிறார்கள். அதாவது, சம்பந்தட்ட மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த கட்சிகளில் செல்வாக்கு மிகுந்த நிர்வாகிகளைத் தனது பக்கம் இழுப்பதன் மூலம் அங்கு வாக்குகள் சிதறுகின்றன. இதை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர் என்கிறார்கள்.

இதே பாணியைத் தமிழகத்தில் மேற்கொள்ள நினைக்கும்போது, தமிழகத்தில் பாஜக போன்ற கட்சியில் இணைவதுக்குப் பலரும் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பிரபலம் ஒருவரின் பின்னால் இயங்க முற்படுவதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த பாணியைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் தனக்கான பிரமுகரைத் தேர்வு செய்து கொண்டதாகவும் கூறுகிறார்கள்.கமல் கூறும் கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள் தவிரப் பிற கட்சிகளிடமிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் எழுவதில்லை.

நடிகர் விஜய் நடிப்பில் சர்க்கார் என்ற திரைப்படம் வெளியானது. படத்தில் அரசு இலவசமாக அளித்து வரும் டிவி, மிக்ஸி போன்ற பொருட்களைத் தீயில் எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும், மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடங்கி விஜய் தொடர்ந்து அதிமுகவினரால் எதிர்க்கப்படுகிறார். இந்த மாற்றம் சில ஆண்டுகளாகவே நீடிக்கிறது. அதிலும் மெர்சல் படத்திலிருந்துதான். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த விமர்சனம் எழுந்தபின்தான் என்கிறார்கள் விமர்சகர்கள். அந்த நேரத்தில் பாஜக தமிழக தலைவர்களால், விஜயின் பெயர் ஜோசப் விஜய் எனக் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!