இன்றைய ராசி பலன்கள் ( 06 நவம்பர் 2023 திங்கட்கிழமை )

 இன்றைய ராசி பலன்கள் ( 06 நவம்பர் 2023 திங்கட்கிழமை )

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி திங்கட்கிழமை 6.11.2023,சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.05 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று மாலை 03.05 வரை ஆயில்யம். பின்னர் மகம். பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் : இன்று சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் இறங்கும் முன்பாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும்.  தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களு டன் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

ரிஷபம் : அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் வகை யில் சுபச்செலவுகள் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மிதுனம் : மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழியில்  எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

கடகம் : தொடங்கும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கும் பணவரவுக்கும் நிறைய வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோ தரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு வீட்டில் தெய்வவழிபாடு  செய்யும் வாய்ப்பு ஏற்ப டும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். சிவவழிபாடு காரியங்களை அனுகூலமாக்கும்.

சிம்மம் : காரிய அனுகூலம் ஏற்படும் நல்ல நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

கன்னி : மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால்  குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.

துலாம் : தொடங்கும் காரியங்கள் அனுகூலமாகவும் லாபகரமாகவும் முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் கூடும்.

விருச்சிகம்  : மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நல்ல நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். முருகப்பெருமானை  வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு  :   . முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சங்கடங் கள் குறையும்.

மகரம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன்  வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். மகான் ராகவேந்திரரை வழிபட மனஉளைச்சல்கள் நீங்கும்.

கும்பம் : அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் எதிர்பார்த்த காரியம் ஒன்று சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம் : தேவைகள் பூர்த்தியாகும் நல்ல நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...