ரோல்ஸ் ராய்ஸ்க்கே இந்த நிலையா? |தனுஜா ஜெயராமன்
ரோல்ஸ் ராய்ஸ் ஹோல்டிங்ஸ் அதன் புதிய தலைமை நிர்வாகியின் கீழ் இந்நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விரைவில் சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்க செய்ய உள்ளது என ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த பணிநீக்கம் மூலம் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து ஊழியர்களை பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
உலகின் ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ், கடந்த சில வருடங்களாக டெஸ்லா-வின் வெற்றியை தொடர்ந்து எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் இறங்கியது. இதன் மூலம் சமீபத்தில் ஸ்பெக்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒவ்வொரு கார்களையும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரும் பணக்காரர்களுக்கு உயர்தரத்தில் கஸ்டமைஸ் செய்து அளிக்கும் சேவைகளை அளித்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஆடம்பர பிரிவில் வந்தாலும், இந்நிறுவன கார்களின் செயல்திறனிலும் பெயர்போனது.
தற்போது வெளியாகியுள்ள 2500 ஊழியர்கள் பணிநீக்கம் அறிவிப்பில் அதிகப்படியான பணிநீக்கம் என்ஜின் தயாரிப்பின் உலகளாவிய செயல்பாடுகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றிய நிலையில் என்ஜின் தயாரிப்பு பிரிவில் பணிநீக்கம் நடக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார்கள் பெட்ரோல் கார்களை காட்டிலும் சிறப்பான செயல்திறனையும், அதிகப்படியான டெக் சேவைகளையும் வழங்க கூடியதாக மாறியிருக்கும் வேளையில் இந்த பணிநீக்கம் வருகிறது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் முழு எலக்ட்ரிக் கார் நிறுவனமாகவும் மாற திட்டமிட்டு உள்ளது.