பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா! | தனுஜா ஜெயராமன்
உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது. அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடக்க வீர்ர்கள் நன்றாக ஆடினார்கள். அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து அடித்து ஆடியதால் அணியின் ரன் கணக்கு உயர்ந்தவாறு இருந்தது. அதே நேரத்தில் குறிப்பிட்ட இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளும் சரிந்தது.
இறுதியாக 45 ஓவர்கள் 3 பந்துகள் வீசப்பட்டிருந்த நிலையில் 305 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அனைத்து விக்கேடுகளையும் இழந்து போராடி தோற்றது. இறுதியாக பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ஆஸ்திரேலியா ருசித்தது.