நாமினேஷன் ப்ராசஸில் போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

 நாமினேஷன் ப்ராசஸில் போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போதுவரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 16 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே போட்டிகளும் கடுமையாகி உள்ளது.

இவர்களின் முதல் வாரத்திலேயே அனன்யா எலிமினேட் ஆன நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி எழுத்தாளர் பவா செல்லதுரையும் வெளியேறினார். இதனால் கடந்த வாரத்தில் எலிமினேஷன் நடைபெறவில்லை. இந்த வாரத்தில் மொத்த வன்மத்தையும் இறக்கி நாமினேட் செய்து வருகின்றனர்.

கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் அதிகமான பிரச்சினைகள், சவால்கள், சண்டைகள், விவாதங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இவர்களின் பல்வேறு கடும் பஞ்சாயத்துக்களை தொடர்ந்து கடந்த இரு தினங்களில் கமல்ஹாசன் தீர்த்து வைத்ததையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் போட்டியாளர்கள் நாமினேஷன் போட்டியில் ஈடுபட்டனர். மாயா விஷ்ணு , ப்ரதீப் இல்லாமல் நாமினேஷனா? வாய்ப்பில்லை ராசா என சக போட்டியாளர்கள் குத்தி வருகின்றனர். இந்த முறை ஐஷூவும் அதில் தப்பவில்லை.

இன்று அதிகமாக மாயா நாமினேட் செய்யப்பட்டதை பார்க்க முடிந்தது. பூர்ணிமா அழகாக இருப்பதாகவும் ஆனால் அவருக்கு மூளை இல்லை என்றும் போட்டியாளர்கள் கூறியதை பார்க்க முடிந்தது. இதேபோல பிரதீப்பும் அதிகமாக நாமினேட் செய்யப்பட்டார். அவர் அதிகமாக லூஸ் டாக் விடுவதாக சொல்லப்பட்டது. விசித்ராவும் அதிகமான போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...