கூகுள் மேப்ஸ்க்கு போட்டியா மேப்மைஇந்தியா ! | தனுஜா ஜெயராமன்
கூகுள் மேப்ஸ்-இன் போட்டிக் கம்பெனியான மேப்மைஇந்தியா கடந்த நிதியாண்டில் ரூ.282 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இதில் வட்டி போக ரூ.108 கோடியை லாபமாக அடைந்துள்ளது. 28 ஆண்டுகளான இந்திய நிறுவனம் மேப்மைஇந்தியா மெக்டோனல்டு, ஆப்பிள், அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மேப்பிங் சர்வீஸில் இறங்கியுள்ளது.
ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆய்வு, 400 சர்வேயர்களை வைத்து செய்த வேலையில் 2 கோடி டேட்டா பாயிண்டுகளை கைவசம் வைத்துள்ளனர். இதில் 3டி டேட்டா விஷுவலைசேஷன்ஸ், டெலிமேடிக்ஸ், நேவிகேஷன் சிஸ்டம் அடங்கும். இது கஸ்டமர்கள் முதலீடு செய்த இந்திய பிசினஸ் மாடலாகும். அவர்களது பயணத்தில் கோகோ கோலா கூட்டு சேர்ந்தது. பின்னர் மாரிக்கோ, ஹிந்துஸ்தான் லீவர், இந்திய ராணுவ சேவைகள் இவர்களது வாடிக்கையாளர்கள் ஆனார்கள். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மேப்மைஇந்தியாவுக்கு 500க்கும் மேற்பட்டதொழில் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
400க்கும் மேற்பட்ட சர்வேயர்களைக் கொண்டு மேப்மைஇந்தியா சிறப்பான பணியை செய்தது. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு பகுதியைப் பற்றி பலதரப்பட்ட தரவுகளை சேகரித்தது.
கட்டட வரைபடம், படிக்கட்டுகள், கட்டட அடுக்குத் தளம், பிளாட் நம்பர், போட்டோகிராப்கள், கட்டடத்தின் வகைகள் இதில் அடங்கும். இதை வைத்து கம்பெனி தனது டேட்டா பலத்தை அதிகரித்தது. அத்துடன் 100க்கும் மேற்பட்ட கம்பெனிகளுடன் கூட்டு சேர்ந்தது. மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் டேட்டாக்களை விரைவில் பெறுவதற்கும் வகை செய்யப்பட்டது. மேப்மைஇந்தியா நம் நாட்டின் முதல் இன்டராக்டிவ் மேப்பிங் பேட்ரோலோக மாறியது.
1998இல் சாட்டிலைட் படங்கள் இந்தியாவில் கிடைக்கத் தொடங்கின. இது கம்பெனியின் உற்பத்தித்திறனை அதிகரித்தது. டேட்டாக்களை சேகரிப்பது மிகவும் சுலபமானது.
இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டில் மேப்மைஇந்தியாவின் முதல் இன்டராக்டிவ் மேப்பிங் போர்டல் அதன் வெப்சைட்டில் அப்லோடு செய்யப்பட்டது. சில மாதங்கலிலேயே தினமும் 5-6 ஆயிரம் யுனிக் பார்வையாளர்கள் கிடைத்தனர்.