ஐடி துறையில் கோலோச்சும் இந்திய தலைவர்கள்! | தனுஜா ஜெயராமன்
இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ-வில் இருந்து பல முக்கிய நபர்களை முக்கிய பதவிகளில் அடுத்தடுத்து இந்தியர்களாக நியமிக்கும் பணிகள் வெற்றிகரமாக துவங்கியது.
Cognizant நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பதவி காலம் முடிய இந்தியர்களை நியமிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரவிக்குமார்-ஐ தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.
இதில் சமீபத்திய நியமனமாக காக்னிசென்ட் நிறுவனத்தின் புதிய சிஎஃப்ஓ-வாகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் விப்ரோ CFO அதிகாரியான ஜதின் தலால் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது நியமனம் மூலம் மூத்த பணியாளர்களின் நியமனத்தில் புதிய புத்துணர்ச்சியை கொடுத்தது. இன்போசிஸ்-ன் முன்னாள் EVP மற்றும் கிளவுட் தலைவரான நரசிம்ம ராவ் மன்னேபள்ளி, உலகளாவிய டெலிவரி தலைவராக காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர உள்ளதாகக் கூறப்படுகிறது.
காக்னிசென்ட்-ன் முன்னாள் EVP மற்றும் உலகளாவிய விநியோகத் தலைவரான ஆண்டி ஸ்டாஃபோர்ட் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
இவரோடு இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையின் மூத்த துணைத் தலைவராக இருந்த நாகேஸ்வர் செருகுபள்ளி விரைவில் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் விப்ரோ நிறுனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் விப்ரோவின் அமெரிக்க ஹெல்த்கேர் மற்றும் மருத்துவ சாதனங்களின் தலைவரான முகமட் ஹக், காக்னிசண்டில் லைஃப் சயின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காக்னிசென்ட் கடந்த 5 வருடத்தில் இழந்த வேகத்தை மீண்டும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்போசிஸ், விப்ரோ நிறுவனத்தில் இருந்து மூத்த அதிகாரிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது. காக்னிசென்ட் நிறுவனத்தில் தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பாக இருந்த அஜ்மல் நூரானி, இப்போது தொழில்நுட்பப் பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய இடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் 30 வருடம் அனுபவமுள்ள அனுராக் வர்தன் சின்ஹா தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தின் உயர் துணை தலைவர்மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ஊடக நடைமுறைகளின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.