ரெப்கோ வங்கி வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றம் இல்லை! | தனுஜா ஜெயராமன்

 ரெப்கோ வங்கி வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றம் இல்லை! | தனுஜா ஜெயராமன்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று இக்கூட்டத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டது. இது கடன் வாங்கியவர்களுக்கு இனிப்பான செய்தி.

இன்று இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதோடு 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் கூறினார்.

கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நாணய கொள்கை குழு ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 6.5 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால் ரீடைல் வங்கி வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

எனவே வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகதம் உயர்ந்து மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.

ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயரத்தாத நிலையில் அக்டோபர் மாதமும் இதில் இணைந்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...