எனக்கு என்டே கிடையாதுடா… திரை விமர்சனம்! | தனுஜா ஜெயராமன்
ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. இன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
புதுமுகம் விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதாநாயகியாக ஸ்வயம் சித்தா கொஞ்சமாக நடித்துள்ளார். சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல்உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார்.
படம் ஒன்லைன் ஸ்டோரி எனலாம்.
பாரில் இருந்து வரும் பெண்ணை பிக்கப் செய்ய வரும் கேப் டிரைவர் ஹீரோ..
அவருக்கும் அந்த பெண்ணுக்கும் வரும் பத்து நிமிட பழக்கத்தில் டிரைவரை தண்ணி அடிக்க அழைக்கிறார் அந்த பெண்.
முன்னே பின்னே தெரியாத அந்த பெண் அழைத்ததும் அவரோட தண்ணீ அடித்து ஜாலியாக இருக்கிறார் ஹீரோ.
பாத்ரூம் போய் விட்டு வருவதற்குள் ரூமுக்குள் ஒரு டெட்பாடி கிடக்கிறது. பயந்த அவரிடம் அந்த பெண் சாதாரணமாக பேசிக்கொண்டே அவரும் மயங்கி விழுகிறார், இறந்தும் போகிறார்
ஆட்டோமேடிக் லாக் செய்த வீட்டை ஹீரோவால் திறக்க முடியவில்லை. அப்போது ஒரு திருடன் உள்ளே நுழைகிறான்.
பின்னர் அந்த பெண்ணிற்கு பண உதவி செய்ய உள்ளே நுழைகிறார் ஒருவர்.. தாறுமாறான போதையில் நம்பர் லாக்கை தப்பாக ப்ரஸ் பண்ண டோர் லாக் ஆகிவிடுகிறது.
வீட்டிற்குள் இரண்டு பிணங்கள் , ட்ரைவர், திருடன், உதவ வந்தவர் என மூவரும் வீட்டிற்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். அவர்கள் வெளியே வந்தார்களா? என்பதே மீதி கதை.
எந்த வரைமுறையும் இல்லாமல் வருகிறது கதையும் படமும், லாஜிக் எல்லாம் பார்க்க முடியாது இப்போது வரும் படங்களில்.
ஓரு வீடு ஐந்து பேர் ஒரு கேமிரா போதும் என நினைத்துவிட்டார்கள். படத்தில் வேறு எதுவும் இல்லை.
இது மாதிரி வரும் படங்களுக்கு ஒரு எண்டே கிடையாதா! என யோசிக்க வைக்கிறார்கள் படக்குழுவினர்.