இன்றைய ராசி பலன் (05அக்டோபர் 2023 வியாழக்கிழமை)

 இன்றைய ராசி பலன் (05அக்டோபர் 2023 வியாழக்கிழமை)

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் : இன்று உங்கள் விருப்பத்திற்கேற்ப முக்கிய முடிவுகளை உங்களால் எடுக்க இயலும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். நீங்கள் எதையோ சாதித்ததபோல உணர்வீர்கள். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும். உங்களுள் இருக்கும் திறமைகளை பணியிடத்தில் வெளிபடுத்துவீர்கள். இன்று நிதிநிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் திடமான மனது மற்றும் உறுதி காரணமாக இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் பணிகளை விரைவாக ஆற்ற இயலாத நிலை காணப்படும். இன்று சோம்பலும் மந்தத் தன்மையும் காணப்படும். இன்று கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்க இயலாத நிலை காணப்படும். பணிகள் அதிகமாக காணபப்டுவதே இதற்கு காரணமாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்காது. பருவநிலை மற்றும் ஒவ்வாமை காரணமாக தொண்டை சம்பந்தமான உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் : உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் காரணமாக இன்று சிறிது அமைதியின்மை காணப்படும். இது உங்கள் முடிவெடுக்கும் திறமையை பாதிக்கும். உங்கள் பணிகளை ஆற்றும் போது கவனம் தேவை. இல்லாவிடில் தவறுகள் நேர வாய்புள்ளது. இது சிக்கலுக்கு வழிவகுக்கும். இன்று பணஇழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உங்களால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க இயலாது. தோள் அல்லது கணுக்கால் வலி காணப்படும்.

கடகம் : இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். உங்கள் சக பணியாளர்களிடமிருந்து சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். காரணமேயில்லாமல் அவர்கள் உங்கள் மீது பழி போடுவார்கள். இது உங்கள் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும். இன்று பணபுழக்கம் குறைந்து காணப்படும். அதிக வெப்பம் காரணமாக தோலில் எரிச்சல் ஏற்படும்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நல்ல மனநிலையில் காணப்படுவீர்கள். நல்லது நடக்கும் என்ற உணர்வுடன் இருப்பீர்கள். உங்கள் பணியில் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இந்தப் போக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இன்று உங்களுக்கு ஊக்கத்தொகை போன்ற வகையில் கூடுதல் பணம் கிடைக்கும். உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

கன்னி : இன்று அமைதியின்மை காரணமாக உங்களிடம் உறுதியும் தைரியமும் குறைந்து காணப்படும். இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். உங்கள் இலக்குகளை அடிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்கள் பணயில் சிக்கல்கள் காணப்படும் என்பதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். இன்று பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.

துலாம் : இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். எனவே இன்று சகஜமாக இருக்க வேண்டும். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக ஆக்கலாம். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள். என்றாலும் சில கட்டுப்பாடுகள் காரணமாக நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைய இயலாது. இன்று உங்களால் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. ஒவ்வாமை காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம் : இன்றைய நாள் கடினமாக இருக்கும். உங்களிடம் பதட்டம் காணப்படும். பிரார்தனை மற்றும் வழிபாடு சிறந்த பயனளிக்கும்.  பணிகள் அதிகமாகவும் நேரம் குறைவாகவும் காணப்படும். இதனால் உங்களுக்கு பதட்டம் உண்டாகும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் லட்சியம் அவ்வளவு எளிதானதல்ல. பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்படலாம்.

தனுசு  :   நீங்கள் இன்று விரைந்து பணியாற்றுவீர்கள். கடினமான பணிகளையும் மேற்கொள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைந்து திருப்தியடைவீர்கள். இன்று பக்குவமும் புரிந்துணர்வும் கொண்டதன் காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.பக்தியும் பிரார்தனையும் உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும்.. உங்களின் முயற்சி காரணமாக இன்று அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.

மகரம் : நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதனை பொறுப்புடன் செய்வீர்கள். இதனால் வளர்ச்சியும் வெற்றியும் எளிதாகப் பெறுவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.உங்கள் பணிகளை சாமர்த்தியமாக செய்வீர்கள்.தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.. இன்றைய நாளை அதிக முயற்சி எடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

கும்பம் : இன்று சில பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பதால் பொறுமையும் மன உறுதியும் அவசியம். சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நேர்மறையான எண்ணங்கள் அவசியம். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நல்லுறவு பராமரிக்க முடியாது. மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சிறிது குழப்பம் ஏற்படும். இன்றி நிதிநிலை சாதகமாக இருக்காது. மனக் குழப்பம் காரணமாக ஆரோக்கியக் குறைபாடு காணப்படும்.

மீனம் : இன்று சிக்கல் நிறைந்த நாளாக காணப்படும். வளர்ச்சி குறைந்து காணப்படும். இதனால் இன்று ஏமாற்றங்களும் நிறைந்து காணப்படும். உங்கள் சக பணியாளர்களிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். உங்கள் வளர்ச்சி குறித்து அவர்கள் சிறிது பொறாமைப்படுவார்கள். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். சேமிப்பு குறைந்து காணப்படும். உயரழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...