சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு! | தனுஜா ஜெயராமன்
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேக வெடிப்பு என்பது மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்கிறார்கள்.
இதுவரை அங்குள்ள மக்களின் நிலை என்னவென்று தெரியாத சூழலே உள்ளது.
தலைநகர் காங்டாக் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது லோனக் ஏரி. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் இங்கு 23 ராணுவ வீர்ர்கள்
மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடரும் சூழலில் இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காணும் பணியும் நடைபெறுகிறது.
முன்னதாக, சிக்கிம் முதல்வர் பிஎஸ் தமங் சிங்டம் பகுதிக்குச் சென்று திடீர் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிங்டம் நகர பஞ்சாயத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
காலநிலை மாற்றத்தாலேயே இந்தியாவில் இதுபோன்ற மேகவெடிப்புகள்
நிகழ்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பகுதிகளின் புவியியல் அமைவிடம் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த நில பகுதி, காற்றழுத்தம், பருவமழை (Monsoon)யின் தன்மை ஆகிய முக்கிய காரணங்களால் தான் மேகவெடிப்புகள் ஏற்படுகிறது என அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.