இன்றைய ராசி பலன்கள் (செப்டம்பர் 30, 2023) சனிக்கிழமை

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 30.9.2023, சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.34 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று அதிகாலை 01.07 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் :  நண்பர்கள் உங்கள் மனதில் தேவையற்ற ஆசைகளை உருவாக்க முயன்றால் அதற்கு மயங்கி விடாதீர்கள். தொழிலை நடத்த கடினமாக உழைப்பீர்கள் . அரசு வேலையில் லஞ்சம் வாங்காதீர்கள். நேர்மையான வழியில் சென்றால் பிரச்சனையில் சிக்க மாட்டீர்கள். கொடுத்த கடனை வாங்க சிரமப்படுவீர்கள். யோசிக்காமல் புதிய முயற்சிகளில் இறங்காதீர்கள்.

ரிஷபம் : முடங்கிக் கிடந்த தொழிலுக்கு முழு முயற்சியில் உயிர் கொடுப்பீர்கள். தொழிலில் லாபத்தை அதிகரிப்பீர்கள். காதலியின் கோபத்தால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் வரும் பணத்தை சேமிப்பாக மாற்றுவீர்கள். கோபமாக பேசி மரியாதையை கெடுத்துக் கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள்.

மிதுனம் :  பழைய கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அணுக்கமான நண்பரின் ஆலோசனையால் ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவரின் வியாபாரத்திற்கு உதவி செய்வீர்கள். அரசு காண்ட்ராக்ட் டுகளில் அமோக லாபம் பெறுவீர்கள். கணினித்துறை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் நல்ல வருமானம் பார்ப்பீர்கள். அசையாச் சொத்து வாங்குவீர்கள்.

கடகம் : அதிக சிரத்தையுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளால் அல்லல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு ஆனந்தம் அடைவீர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இஞ்சினியர்கள் தொழிலில் அதிக வருமானமும் உயர்ந்த மரியாதையையும் வீர்கள்.

சிம்மம் : பெறுவாழ்க்கைக்கு வருமானம் தேவைதான். அதற்காக தவறான வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். வியாபாரம் சுமாராக நடப்பதால் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் வெடிக்கும் பிரச்சனையால் குழப்பம் அடைவீர்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

கன்னி : போட்ட முதலீடுகளில் இருந்து திருப்திகரமான லாபம் அடைவீர்கள். பொன் நகைகள் வாங்கி வீட்டுப் பெண்களின் புன்னகைகளைப் பரிசாகப் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு கல்யாண நடத்தி வைப்பீர்கள். பிள்ளைகள்தான் சற்று பிரச்சனையைக் கொடுப்பார்கள். கணவனை இழந்த பெண்மணிக்கு வேலை வாங்கி கொடுத்து பாராட்டு பெறுவீர்கள்.

துலாம் : கடினமான உழைப்பால் நீங்கள் மனச்சோர்வு அடைவீர்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என சிலர் கூறும் ஆசைவார்த்தைக்கு இடம் கொடுக்காதீர்கள். ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். தொழில் வெற்றியால் சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்து சந்தோசம் அடைவீர்கள். ரத்த அழுத்த நோயால் மருத்துவச் செலவு செய்வீர்கள்.

விருச்சிகம் : குடும்பத்தில் இருந்த சங்கடங்களை சாதுரியமாக விலக்குவீர்கள். என்றோ வாங்கிப்போட்ட வீட்டுமனையை நல்ல விலைக்கு விற்பீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனால் பெருமைப்படுவீர்கள். மனைவி மனதுக்கு இதமாக நடந்து கொள்வதால் மனக்கவலையை மாற்றுவீர்கள். வியாபாரத்தை நுணுக்கமாக நடத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்.

தனுசு  :   பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறுவீர்கள். அரசு ஊழியர்கள் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். ஆன்லைன் வியாபாரத்தை அற்புதமாக நடத்துவீர்கள். பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்வீர்கள். உங்களுக்குச் சேரவேண்டிய சொத்தை சகோதரரிடமிருந்து பெறுவீர்கள். மற்றவருக்குச் செய்யும் உதவியால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

மகரம் : பெரிதும் நம்பியிருந்த ஒரு செயல் தாமதம் ஆவதால் தடுமாறுவீர்கள். காலை வாரி விட நினைக்கும் துரோகிகளை அடையாளம் காண்பீர்கள். தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். தனியார்துறை ஊழியர்கள் பணிவாக நடந்து கொள்ள தவறாதீர்கள். சகோதர உறவுகளில் இருந்த சிக்கலை களைவீர்கள். பங்கு வியாபாரத்தில் பதமாக முதலீடு செய்வீர்கள்.

கும்பம் : கடுமையான நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த விவகாரத்தை தீர்ப்பீர்கள். நோய் குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவீர்கள். எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பிளம்மிங் பணியில் ஈடுபடுவோர் அதிக வருமானம் பெறுவீர்கள். வீட்டுமனை வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். துணிவுடன் வேலை செய்வீர்கள்.

மீனம் : “அண்ணன் என்னடா தம்பி என்னடா” என்று ஆதங்கப்படும் அளவுக்கு சகோதர உறவுகளில் சங்கடத்தை சந்திப்பீர்கள். தொழிலாளர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் புரிந்து கொள்ளாத நிலையால் வேதனை அடைவீர்கள். நல்ல பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்க்க அலைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே லாபம் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!