HCL அதிரடி … புதிய திட்டங்கள் அறிமுகம்! | தனுஜா ஜெயராமன்
இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் (HCL)ஆஸ்திரேலிய நாட்டின் 4வது பெரிய வங்கி அமைப்பாக இருக்கும் ANZ வர்த்தகம் செய்யும் 33 நாடுகளில் இருக்கும் டிஜிட்டல் ஊழியர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் தனது கூட்டணியை விரிவாக்கம் செய்துள்ளது.
ANZ நிறுவனத்திற்கு ஹெச்சிஎல் டெக் ஏற்கனவே பல்வேறு சேவைகளை அளித்து வந்த நிலையில், இப்புதிய ஒப்பந்த விரிவாக்கத்தின் மூலம் ரியாலிட்டி, GEN AI, IoT போன்ற தொழில்நுட்பத்தின் கீழ் அடுத்த தலைமுறை டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் Siemens நிறுவனத்தின் ஐடி லேண்ட்ஸ்கேப்-ஐ மேம்படுத்தவும, கிளவுட் அடிப்படையிலான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் சேவையை மேம்படுத்தும் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஹெச்சிஎல் ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐடி சேவை திட்டங்கள் பெற முடியாத காரணத்தால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாமல் மாட்டிக்கொண்டது. இதனால் ஃபிரஷ்ஷர்கள் உட்பட அனுபவம் பெற்ற ஊழியர்கள் வரையில் புதிய வாய்ப்புகள் இல்லாமல் தவித்தனர். இந்த நிலையில் செப்டம்பர் இந்திய ஐடி சேவை துறைக்கு சாதகமான காலக்கட்டமாக மாற துவங்கியுள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக புதிய ஐடி திட்டங்களை பெறுவதில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், செப்டம்பர் மாத துவக்கத்தில் இருந்து அதிகப்படியான திட்டங்களை இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.