மறுபடியும் பிரிட்டனில் ரெசிஷன் அச்சமா? | தனுஜா ஜெயராமன்
பிரிட்டன் நாட்டில் எங்கு பார்த்தாலும் பணி நீக்க (ரெசிஷன்) அச்சம் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்தில் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் நாடாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் பொருளாதாரத்தினை துரத்தி வருகிறது.
பிரிட்டன் நாட்டின் பொருளாதார வல்லுனர்கள், அந்நாட்டில் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின்பு பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் தனியார் நிறுவனங்கள் கொரோனா தொற்றுநோய் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனைக்கு பின்பு தற்போது அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறுது.
இதனால் பிரிட்டன் நாட்டின் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக தங்களுடைய பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்துவதற்கான பேங்க் ஆப் இங்கிலாந்து முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறது.
எஸ்&பி குளோபலின் composite Purchasing Managers’ Index செப்டம்பர் மாதத்தில் 48.6 ஆக இருந்து 46.8 ஆக சரிந்தது, இது ஜனவரி 2021 இல் இங்கிலாந்து லாக்டவுனில் இருந்தபோது உற்பத்தியில் கூர்மையான சரிவடைந்த போது பதிவான அளவீட்டுக்கு பின்பு மோசமான அளவை தற்போது பதிவாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து அந்நாட்டின் பெண்ச்மார்க் வட்டி விகிதங்களை 5.25% என்ற அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு வருவதே அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது.