இன்று ஏழுமலையானை தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ! | தனுஜா ஜெயராமன்

 இன்று ஏழுமலையானை தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ! | தனுஜா ஜெயராமன்

டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கட்களை பெற்று அந்த வெங்கடேச பெருமாளை தரிசிக்கலாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...