கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் – ஜஸ்டின் ட்ரூடோ! | தனுஜா ஜெயராமன்
கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா – இந்தியா இடையிலான உறவுகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திலும் இந்தியர்களுக்கு கனடா விசாக்களை வழங்குவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
கனடாவுக்கான விசா சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது.
கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடிய போது எனது கவலைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டேன்.
கனடா மண்ணில் அவர்களை கொன்றதில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புவதற்கு நம்பகமான காரணங்கள் உள்ளன. எங்களிடம் சுதந்திரமான நீதி அமைப்பு மற்றும் வலுவான நீதி செயல்முறைகள் உள்ளன. சட்டம் தன் கடமையை செய்யும்.
இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளை உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை.இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என இந்தியாவை அழைக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் கனடாவில் அதிக அளவில் வசிக்கிறார்கள். டொரண்டோ, ஸ்காபரோ, மிஸஸாகா, வான்கூவர் ஆகிய பகுதிகளில் வசிக்கிறார்கள். பாதுகாப்பான நாடுகள் என்று பட்டியலிட்டால், அதில் முதலிடத்தில் இருக்கக்கூடிய நாடு கனடா. குடியேறிகளை வரவேற்று, அவர்களுக்கு வேலை வழங்கி, வாழ்வளிக்க கூடிய ஒரு நல்ல நாடு அது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் அங்கே வேலை செய்கிறார்கள்.