ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் நிலை என்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் கடந்த 5 நாளில் 5 சதவீதத்திற்கு மேல் சரிந்து 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
ஹெச்டிஎப்சி இணைப்பிற்கு முன்பு ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வராக் கடன் சொத்துக்களின் மதிப்பு 1.2 சதவீதமாக இருந்த நிலையில் இணைப்பிற்கு பின்பு 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து வங்கிகளின் மொத்த சொத்துக்களில் வராக் கடன் சொத்துக்கள் மதிப்பு மார்ச் 2023 முடிவில் 10 வருட சரிவான 3.9 சதவீதமாக சரிந்துள்ளது. மார்ச் 2018ல் மொத்த வராக் கடன் அளவு 11.5 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் 2023ல் 3.9 சதவீதமாக குறைந்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி உடன் ஹெசிடிஎப் இணைக்கப்பட்ட பின்பு, ஹெச்டிஎப்சி வங்கியின் வராக் கடன் அளவு அதிகரிக்க துவங்கியது.
ஜூன் 30 ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வராக் கடன் சொத்துக்கள் 1.2 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹெச்டிஎப்சி-யிடம் இருந்து வந்த கூடுதலான பணப்புழக்கத்தின் வாயிலாக ஹெச்டிஎப்சி வங்கியின் NIM என அழைக்கப்படும் Net Interest Margins அளவு குறைய உள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கியின் NIM அளவு ஜூன் 30ல் 4.3 சதவீதமாக இருந்தது, இணைப்பிற்கு பின்பு இது 3.9 முதல் 4 சதவீதமாக குறையலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.