இந்தியா-கனடா பிரச்சனையில் சரிந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள்! | தனுஜாஜெயராமன்

 இந்தியா-கனடா பிரச்சனையில் சரிந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள்! | தனுஜாஜெயராமன்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் சரிவில் மாடிக்கொண்டு 3.08 சதவீதம் சரிந்து 1583.80 ரூபாய் வரையில் குறைந்தது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கனடா நாட்டின் ஐடி சேவை நிறுவனமான Resson Aerosace-ல் 2018 ஆம் ஆண்டு 10 சதவீத பங்குகளை 6.63 மில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கியது.

இந்த நிலையில் கனடா – இந்தியா பிரச்சனைக்கு மத்தியில் Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது கூட்டணியை முறித்துக்கொள்ளவும், முதலீட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது.

Resson Aerosace தானாக முன்வந்து கூட்டணி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக வியாழக்கிழமை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வைத்திருந்த கிளாஸ் சி Resson நிறுவனத்தின் 11.18 சதவீத பங்குகள் பெறப்பட்டு பணமாக செட்டில் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Resson Aerosace நிறுவனம் கனடா நாட்டின் நிறுவன பதிவு அமைப்பான Corporations Canada வில் கூட்டணியை முறிவுக்கான ஒப்புதல் சான்றிதழ்-ஐ சமர்ப்பித்த நிலையில், இரவு 8.19 மணிக்கு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பை கொடுத்துள்ளது.

கூட்டணி முறிவின் மூலம் Resson Aerosace நிறுவனம் 11.18 சதவீத பங்குகளுக்கு 4.7 மில்லியன் கனடா டாலர்கள் பணத்தை அனுப்பியுள்ளது, இது கிட்டத்தட்ட 28.7 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நிறுவனங்கள், கனடா அமைப்புகள் இந்தியாவில் செய்யப்பட்டு உள்ள முதலீடுகளும், வரப்போகும் முதலீடுகளின் நிலை பெரும் கேள்விக்குறியாகியிருக்கும் வேளையில் முதல் பாதிப்பை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா எதிர்கொண்டு உள்ளது என்பது தொழில்துறையில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...