இந்தியா – கனடா உறவில் விரிசலா? | தனுஜா ஜெயராமன்
இந்திய அரசு கனடாவில் இருக்கும் இந்தியர்களை அந்நாட்டின் சில முக்கிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா கனடா மத்தியிலான உறவு பல காலமாக சிறப்பாக இருக்கும் காரணத்தாலேயே பல லட்சம் இந்தியர்கள் கனடாவில் பணியாற்றியும், குடியுரிமை பெற்றும் உள்ளனர். கனடா ஒரு அமைதியான நாடாக இருந்தும் வந்தது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரை இந்திய அரசு கொன்றதாக குற்றம் சாட்டினார். இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர், ஜூன் 18ஆம் தேதி கனடாவின் Surrey-யில் உள்ள குருத்வாராவின் கார் பார்கிங் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்ப்பு இருப்பதாக கூறினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த நிலையில் தற்போது இருநாடுகளுக்கு மத்தியிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கனடாவின் சில பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணம் செய்தாலும் அதிகப்படியான எச்சரிக்கை உடன் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டு அரசு, அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் என்னாகும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
கனடாவில் இருந்து இந்தியா மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை மட்டுமே வாங்குகிறது. ஆனால் கனடா கல்லூரிகளில் இந்தியர்கள் அதிகளவிலானோர் படித்து வருகின்றனர். இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, ரெமிட்டனஸ் ஆகியவற்றில் கனடாவில் இந்தியாவில் பங்கு அதிகம்.
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மரணம் தொடர்பான குற்றச்சாட்டு இரு நாடுகள் மத்தியில் பூதாகரமாக வெடித்த நிலையில் இது மேலும் மோசமாகும் பட்சத்தில் தற்போதைய முதலீடு மட்டும் அல்லாமல் எதிர்கால முதலீடுகளும் கேள்விக்குறியாகும். இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஏற்கனவே முறிந்துள்ளது, ஹோல்டு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.