மகளிர் இடஒதுக்கீட்டை விரைந்து கொண்டு வர வேண்டும் – கனிமொழி சோமு! | தனுஜா ஜெயராமன்
மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் பேசியதாவது….முதலாவதாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அடையாளமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்துள்ளார்.
பழங்காலத்திலிருந்தே, தமிழ்நாடு ஒரு புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எங்களிடம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது இருந்தது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ஒரு ‘உரிமைக்கான விஷயம். 1921ஆம் ஆண்டு முதன்முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை நீதிக்கட்சி வழங்கியது என்பதை நினைவுபடுத்துகிறேன்.
எனவே இந்த மகளிர் இடஒதுக்கீட்டை மக்களவை தேர்தலுக்கு முன் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவேளை இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது எப்போது அமல்படுத்தப்படும் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி சோமு பேசினார்.