தங்கம் வாங்க சரியான தருணம்…! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி பென்ச்மார்க் வட்டி விகிதத்தை தனது நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்த காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் பெரிய அளவில் குறைந்து இன்று தங்கம் வாங்குவோருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை என்பது 1946.69 டாலரில் இருந்து 1925 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் எம்சிஎஸ் சந்தையிலும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.58 சதவீதம் சரிந்து தொடர்ந்து 59,062.00 விலையில் அக்டோபர் மாத பியூச்சர் ஆர்டர் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 1.10 சதவீதம் சரிந்து 72,428 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் சரிந்து 60,330 ரூபாய்க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் சரிந்து 55,300 ரூபாயாக சரிந்துள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாய் சரிந்து 44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரீடைல் சந்தையில் இன்று வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 78000 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் துவக்கத்தில் இருந்து தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தை மற்றும் பிற முதலீட்டு சந்தைக்குள் நுழைந்த காரணத்தால் சர்வேதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியா சந்தையிலும் எதிரொலித்து இந்திய மக்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.