கூகுள் பே சேவைக்கு போட்டியாக எலான் மஸ்கின் பேமெண்ட் நெட்வொர்க்! | தனுஜா ஜெயராமன்

 கூகுள் பே சேவைக்கு  போட்டியாக எலான் மஸ்கின் பேமெண்ட் நெட்வொர்க்! | தனுஜா ஜெயராமன்

டிவிட்டரில் விரைவில் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது கட்டாயம் சர்வதேச அளவிலான பேமெண்ட் நெட்வொர்க்காக இருக்கும் என எளிதாக சொல்ல முடியும். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் கிரியேட்டர்களுக்கான பேமெண்ட் மூலம் இதற்கான நெட்வொர்க்-ஐ எலான் மஸ்க் அமைத்து விட்டார்.

டிவிட்டரில் தொடர்ந்து அதிரடி காட்டி வரும் எலான் மஸ்க் நினைத்தது விடவும் வேகமாக பேமெண்ட் சேவையை X தளத்தில் கொண்டு வர உள்ளார். எலான் மஸ்க் உருவாக்கிய xcom தான் பின்னாளில் PAYPAL உடன் இணைந்து உலகின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமாக மாறியது மூலம் எலான் மஸ்க்-கிற்கு இன்று வரை பேமெண்ட் துறை முக்கிய டார்கெட் ஆக இருக்கிறது.

இதனால் டிவிட்டர் அதாவது X தளத்தில் கூகுள் பே சேவைக்கு இணையான ஒரு பேமெண்ட் நெட்வொர்க்-ஐ நாடுகள் அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொண்டு வரப்பட உள்ளது.

இது சுந்தர் பிச்சையின் கூகுள் பே சேவைக்கு பெரும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பே இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகளில் இயங்கி வருவதால் டிவிட்டரின் பேமெண்ட் சேவை சர்வதேச அளவில் பெரும் போட்டியாக இருக்கும்.

மேலும் டிவிட்டர் ஷாப்பிங் முதல் பல சேவைகளை இதில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் காரணத்தால் கூகுள் பே சேவையின் ஆதிக்கம் குறையவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...