இன்றைய ராசி பலன் (புதன்கிழமை 20 செப்டம்பர் 2023)

 இன்றைய ராசி பலன் (புதன்கிழமை 20 செப்டம்பர் 2023)

மேஷம் :  தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். இன்று வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும் முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். நிதிநிலைமை இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும். முக்கிய முதலீடுகளில் இன்று பணத்தை சேமிக்கலாம். உங்கள் பணிக்கான பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம் : இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். தைரியம் மற்றும் உறுதி வெற்றிக்கு வழி வகுக்கும். இன்று பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். நீங்கள் விரைவாகவும் எளிதாகவும் பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடுவீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நீங்கள் இன்று ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

மிதுனம் : இன்று பதட்டமும் கவலையும் காணப்படும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி செயலாற்றுவது சிறந்தது. இன்று பணிகள் அதிகமாக காணப்படலாம். சிறப்பாக திட்டமிட்டு மிகச் சரியாக பணிகளை ஆற்ற வேண்டும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.

கடகம் : இன்று இழப்புகள்நேரா வண்ணம் கவனித்து செயலாற்ற வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களின் சில பணிகள் முடிக்க முடியாமல் நிலுவையில் இறக்கும். இன்று அதிக பொறுப்புகள் காரணமாக பணம் அதிக அளவில் செலவாகும். தேவையற்ற செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

சிம்மம் : இன்று ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று பயனுள்ள முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணி நிமித்தமான பயணம் காணப்படும். இது உங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்று சம்பவங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய உங்கள் செயல்களை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளி வைக்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இன்று பண வரவு குறைந்து காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் : இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். அடுத்தவர் தரும் வாக்குறுதியை நம்பாமல் உங்கள் கடின உழைப்பை நம்பி செயலாற்றினால் வெற்றி நிச்சயம். பணியிடச் சூழல் இன்று மகிழ்சிகரமாக இருக்காது. இன்று சில பண வரவுகள் காணப்பட்டாலும் செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கும்.

விருச்சிகம் : ஆன்மீக ஈடுபாடு நல்ல பலன்களை அளிக்கும். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு மேற்கொள்வது சிறந்தது. உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே கவனமாகப் பணியாற்ற வேண்டும். பரபரப்பான பணிகள் காரணமாக தலைவலி அல்லது கால் வலி ஏற்படலாம். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. இன்று கூடுதல் செலவுகளை சந்திக்க நேரும்.

தனுசு  :  இன்று உறுதியாக நற்பலனகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறக் காண்பீர்கள். உங்கள் பணியில் வளர்ச்சியைக் காண்பீர்கள் . சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள். பூர்வீகச் சொத்து வகையில் இன்று வரவு காணப்படும். உங்கள் சேமிப்பு உயரும்.

மகரம் : இன்று தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். நீங்கள் முயற்சி எடுத்தால் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக வெற்றியை அளிக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். இன்று பண வரவு குறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்கள் காரணமாக குழப்பம் மட்டுமன்றி தலைவலியும் ஏற்படும்.

கும்பம் : உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தடைகள் காணப்படும் ஒரு முடிவை செயலாக்குவதற்கு முன் ஒன்றிற்குஇரண்டு முறை யோசிக்க வேண்டும். தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு காணப்படும். சக பணியாளர்களுடன் சூடான விவாதங்கள் அல்லது அகந்தை உணர்வுகள் தலை தூக்கும். நிதிநிலைமை சாதகமாக இருக்காது. தேவையற்ற செலவுகளால் கவலை ஏற்படும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். நிதிநிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...