தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் இல்லை! தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ! | தனுஜா ஜெயராமன்

 தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் இல்லை! தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ! | தனுஜா ஜெயராமன்

நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து தற்போது வரை மூன்றாவது முறையாக இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை 4 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இருவர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைந்துள்ளனர். இந்த மரணங்கள் நிபா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

கேரளாவில் நிபா வைரஸால் இரண்டு நோயாளிகள் இறந்துள்ளனர். டஹ்ற்போதைய நிலவரப்படி மொத்தம் 77 நோயாளிகள் அதிக ஆபத்துள்ள (ஹை ரிஸ்க்) நிலையில் இருப்பதை கருத்திக் கொண்டு, அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் அச்சம் தெரிவித்துள்ளார். தொற்றுநோயைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 700 பேருக்கும் சமூக இடைவெளியை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை அந்த அறிகுறிகளுடன் எவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதற்கென சிறப்பு அறைகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், கவசங்களும் இருப்பில் உள்ளன.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் அவரிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...