இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை 11 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 11.9.2023, சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.12 வரை ஏகாதசி . பின்னர் துவாதசி. இன்று இரவு 10.56 வரை பூசம். பிறகு ஆயில்யம். மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் :  இன்று சலிப்பூட்டும் நாளாக இருக்கும். என்றாலும், திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால் உங்கள் முயற்சியில் வெற்றி நிச்சயம். பணியில் இன்னல்களை சந்திப்பீர்கள். இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

ரிஷபம் : இன்று முனேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நேரத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன் படுத்துவீர்கள். உங்களின் சிறந்த தகவல் பரிமாற்றம் பிறரை காந்தம் போல கவர்ந்திழுக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். நிதியைப் பொறுத்த வரை இன்று சுதந்திரமான நிலை காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகின்றது.

மிதுனம் :  இன்று எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளவேண்டும். இன்று நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். பணியிடச் சவால்களை சந்திக்க பொறுமை அவசியம். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.

கடகம் : இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இறைவழிபாடு, ஸ்லோகம் கூறுவது ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைத் தரும். இன்று அதிக பொறுப்புகளும் மன உளைச்சல்களும் இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் செயல் திறன் உங்களுக்கு திருப்தியை அளிக்காது. இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம்.

சிம்மம் : இன்று ஆன்மீகத்தில் ஈடுபடலாம். அமைதியாக இருக்க ஒரே வழி பிரார்த்தனை ஆகும். இன்று பணிச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள். பணப் புழக்கும் குறைந்து காணப்படும். அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். தொடை மற்றும் கால் வலியால் அவதிப்படுவீர்கள்.

கன்னி : இன்று பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள். உங்கள் நலனை மேம்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை திருப்தி அளிக்கும். நீண்ட கால நிலுவை தொகைகள் உங்கள் கைக்கு வந்து சேரும். இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

துலாம் : திட்டமிட்ட முறையான அணுகுமுறை மூலம் இன்றைய நாளை மதிப்பு மிக்கதாக்குவீர்கள். உங்கள் சிறந்த தகவல் பரிமாற்ற திறன் மூலம் சிறந்ததை சாதிப்பீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி பெற புத்திசாலித் தனத்தை பயன்படுத்துங்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடன் நல்லுறவு காணப்படும். உங்கள் நேர்மையான அணுகுமுறை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று தேவையற்ற மனக் கவலைகள் காணப்படும். அதனை தவிர்க்கவும். நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். இது ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. இன்று நிதிவளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. சில இழப்புகள் காரணமாக ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பது கடினம்.

தனுசு  :   இன்று அமைதியும் கட்டுப்பாடும் தேவை. முடிவுகள் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். பிரார்த்தனை மற்றும் நல்ல இசை மனதிற்கு ஆறுதலும் திருப்தியும் அளிக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு காரணமாக பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள். பணியிடத்தில் அசௌகரியம் காணப்படும். இன்று பண வரவிற்கு உகந்த நாள் அல்ல.

மகரம் : இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். சமயோசிதமாக செயலல்ற்றினால் இன்று உற்சாகமாக இருக்கலாம். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

கும்பம் : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். புத்திசாலிதனத்தை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். உங்களின் நம்பகமான சிறந்த பணி காரணமாக நற்பெயர் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று பணப்புழக்கம் சிறப்பாக காணப்படுகின்றது. இன்று தேக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மீனம் : இன்று உற்சாகமான சூழ்நிலை காணப்படும். என்றாலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சரியாக திட்டமிட்டால் நற்பலன்களைக் காணலாம். பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் உண்டாகும். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம். தியானப் பயிற்சி ஆரோக்கியத்தை சிறப்புடன் வைத்திருக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!