சம்பள உயர்வினை தவிர்த்து வருகிறதா ஐடி துறை ஏன் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை சரியாக கொடுக்கவில்லை என்கிறார்கள். இன்போசிஸ் போன்ற சில நிறுவனங்கள் கூட சம்பளம் உயர்வு என்பதே போடவில்லை என்கிறார்கள் . இதே போல் வேரியபிள் பே, பதவி உயர்வு ஆகியவற்றிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்திய ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்களின் பென்ஞில் (bench) இருக்கும் ஊழியர்களின் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனாலேயே தேர்வு செய்யப்பட்ட பல ஊழியர்களுக்கு இன்னும் Joining Date அளிக்கப்படாமல் உள்ளது, இதேபோல் பிரஷ்ஷர்கள் சேர்ப்பிலும் அதிகப்படியான காலதாமதம் உருவாகியுள்ளது
இந்த நிலையில் வேறு வேலைவாய்ப்புகளுக்கு அதாவது வேறு நிறுவனத்திற்கு செல்ல விரும்பினால் தற்போது இருக்கும் ஓரே வாய்ப்பு GCC-கள் தான். ஆனால் இதற்கும் போட்டி அதிகமாக உள்ளது என்பது தான் நிதர்சனம். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் (GCC) என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய டெலிவரி சென்டர்களில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றது ஸ்டாஃபிங் நிறுவனங்கள். இந்திய ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் பொருட்டு ஊழியர்களை முதலில் பில்லிங்கிற்குள் கொண்டு வருவதில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல் பென்ஞில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் வேறு தொழில்நுட்பத்திற்கு மாறும் வாய்ப்பு, ரீஸ்கில்லிங் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.