மாடு முட்டிய விவகாரம்… சிறுமி நலம்!
நேற்று சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை நட்ட நடு ரோட்டில் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் , மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அவை சாலைகளிலும்,தெருக்களிலும் இரவு பகல் பாராமல் சுற்றித் திரிவதால் ஏற்படும் தொல்லைகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் தான் இருக்கிறது. தெருவில் நடப்பவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று குற்றம் சாட்ட படுகிறது.
நல்லவேளையாக மாடு முட்டிய சிறுமி ஆயிஷா நலமாக இருப்பதாக செய்திகள் வருகிறது. தற்போது புற காயங்களோடு நலமாக இருப்பதாக வரும் செய்திகள் ஆறுதலை தருகிறது. குழந்தையின் பயத்தை போக்க மனநல சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
கூடிய விரைவில் சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக தகவல்களில் தெரிகிறது.
மாடிகளின் உரிமையாளர் மீது நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக சொல்கிறார்கள். இனி சாலைகளில் மாடுகளை திரிய விடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கபடும் என எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.