நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன்.
ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் செ
ன்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.வந்தவர்கள் அவரிடம் ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள்
உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ” நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை தேடுகிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
சாதாரண நகைச்சுவை என்றால் சிரித்துவிடுவார்கள். இதை அவ்வாறு விட்டுவிட முடியுமா?